Sunday, 31 December 2017

                 சித்த மருந்துகள் செய்முறை

                       "தீபாக்கினி சூரணம்"

சீரகம்
திப்பிலி
மிளகு
இந்துப்பு
இவைகள் வகைக்கு ஒருபலம் (35 கிராம்)
பெருங்காயம்
கருவேப்பிலை
வகைக்கு அரை பலம் (17.500 கிராம்)

பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும், இந்துப்பை தவிர மற்ற சரக்குகளை பொன்வறுவலாக வறுத்து ,பின்னர் அனைத்து சரக்குகளையும் இடித்து துணியில் சலித்து  வைத்துக்கொள்ளவும்.

ஒரு விராகன் எடை( 4 கிராம்)  சூரணத்தை முதலில் சாப்பிடும் சாப்பாட்டுடன் போட்டு காய்ச்சிய பசுநெய்விட்டு பிசைந்து இருவேளை சாப்பிட்டு வரவும்.

வயிற்றுவலி
வயிற்று எரிச்சல்
உஷ்ணவாயு பேதி
அஜீரணம்
ஆகிய நோய்கள் நீங்கும்.

இச்சா பத்தியம்

நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.
www.gkvarmam.blogspot.com



No comments:

Post a Comment