Friday, 22 December 2017

              "யந்திரம் வரையும் இரகசியம்"




யந்திரம் எழுதும் முன்னர் தகட்டை பரிசோதித்து கொள்ளவும், ஓட்டை கீறல் விரிசல் கசங்கல் இருக்ககூடாது.

யந்திரம் வரையும் முன்னரே தேவையான அளவு வெட்டிக்கொள்ள வேண்டும், வரைந்தபின் வெட்டக்கூடாது.

யந்திரம் எழுதும்போது அதற்குரிய திசையை நோக்கி உட்கார்ந்து எழுத வேண்டும்.

யந்திரம் வரையும் போது அதற்குரிய மூலமந்திரத்தை செபித்தவாறு எழுதினால் மிகுந்த பலனை அளிக்கும்.

யந்திரங்கள் மொத்தமாக எழுதி வைத்துக்கொண்டு பின் தேவையானபோது எடுத்து பூஜை செய்து கொடுக்கலாம்.

மாம்பலகை இரண்டெடுத்து ஒன்றின்மீது நாம் அமர்ந்து கொண்டும்,சற்று உயரமாயுள்ள ஒன்றின் மீது யந்திரத்தை வைக்கவும் வேண்டும்.

யந்திரங்கள் எழுதும்போதும் மந்திரங்கள் செபிக்கும்போதும் மாம்பலகையின் மீது உட்கார்ந்து செய்தல் வேண்டும்.
சுவாமி படங்கள் மற்றும் யந்திரங்கள் கிழக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும்.

பூசையின்போது இடையில் மற்றவர்களிடம் பேசுவது செல்போன் உபயோகித்தல் கூடாது.

மந்திரங்கள் செபிக்கும்போது தங்கள் கண்களை மூடி தங்கள் காதுகளுக்கு மட்டும் கேட்கின்ற மாதிரி மந்திரங்களை செபித்தல் போதுமானது.

மந்திரத்தை செபிப்பதற்கு முன்னர் அம்மந்திரத்தை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.

சகலவிதமான வசிய காரியங்களுக்கும் கிழக்கு நோக்கி அமர்ந்து செபம் செய்ய வேண்டும்.

சகலவிதமான தெய்வ சக்திகளையும் ஞானத்தையும் பெற வடக்கு நோக்கி செபம் செய்ய வேண்டும்.

எதிரிகளை அடக்க அழிக்க தெற்கு நோக்கி அமர்ந்து செபம் செய்ய வேண்டும்.

மந்திர உருவேற்ற காலை 3.30 மணிமுதல் 6.00 மணிவரை மற்றும் மாலை 6.00 மணிக்கு மேல் செய்ய சிறந்த பலனை கொடுக்கும்.

சகலவிதமான மந்திரங்கள் செபிக்க ருத்திராட்ச மாலை சிறந்தது மாலையை மேல்நோக்கி உருட்டினால் மற்றவர்களுக்கும் ,கீழ் நோக்கி உருட்டி செபிக்க நமக்கும் பலனளிக்கும்.

யந்திரம் வரைந்து தகட்டை பலகை மீது வைத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி குங்குமம் தடவி யந்திரத்தின் மேல் பிழிந்து பலி கொடுக்கவும், பின் தண்ணீரில் கழுவி பால் பன்னீர் மஞ்சள்நீர் இளநீர் கொண
www.gkvarmam.blogspot.com

No comments:

Post a Comment