"வற்மகண்டி" ௪
செப்பினோம் இன்னமொரு செய்திகேளு
செயலான கடைக்கண்ணின் இறைக்குகீழே
நட்புடனே அதில்தானே நட்சத்திரகாலம்
நன்மையுடன் அடிபட்டால் குணத்தைகேளு
கப்புடனே கண்ணுரெண்டும் சிவந்துகொண்டு
கடிசீராய் நாசியில் நீர் ஒழுகும்பாரு
செப்பினார் நாழிகைதான் பதினெட்டுக்குள்
செயலாகப் பார்த்து நீ அறியவென்றே
விளக்கவுரை :-
இன்னும் ஒரு வர்மத்தினை கூறுகிறேன் கேட்பாயாக, நெற்றிப்பொட்டு பகுதியை நோக்கியிருக்கும் கடைக்கண்ணின் எழும்பு பகுதியிலிருந்து நெல்லிடை அளவுக்கு கீழாக அமைந்துள்ளது நட்சத்திரகாலம் என்னும் வர்மம்,இவ்விடத்தில் அடிபட்டால் கண்களுக்குள் நட்சத்திரம் பறக்கும், கண்கள் இரண்டும் சிவந்துவிடும்,மூக்கின் வழியாக நீர் ஒழுகிக்கொண்டே இருக்கும், மாத்திரைக்கு மீறி அடிபட்டால் உயிர் போய்விடும், ஏழு மணிநேரத்திற்குள் இளக்குமுறையை கையாள வேண்டும்,இல்லையெனில் அசாத்தியமாகி விளைவுகள் பெருகும்.
பாடினதோர் நாழிகைக்கு முன்னதாக
பண்பாக இளக்குமுறை பகரக்கேளு
நாடியே மறுபுறத்தில் கைவிரித்து
நன்றாகவேயடிக்க மாத்திரைகேளுகை
நாடியே ஓங்கியேயோர் சாணளவில் தானும்
அடித்திருத்தி யெடுத்துக்கொண்டுகேளு
தேடியே சுக்கு வைத்துக்காதுரெண்டும்
திறமாகவூத வுயிற்றிரும்பும்பாரே.
விளக்கவுரை :-
ஏழுமணி நேரத்திற்கு முன்னதாக செய்ய வேண்டிய இளக்குமுறையினை கூறுகிறேன் கேள்,எந்த கண்பகுதியில் அடிபட்டதோ அதற்கு நேர் பின்புறமாக இடதுஉள்ளங்கையை அவ்விடத்தில் வைத்து வலது கையை விரித்து ஒரு சாண் அளவு இடைவெளி விட்டு அடிக்கவும் ,அதன்பின்னர் நெற்றியிலிருந்து கீழாக இரு கைகளாலும் தடவி விடவும் ,சுக்கை தோல் சீவிவிட்டு வாயில் போட்டு மென்று அதன் வேகத்தை இரு காதுகளிலும் ஊதவும்,ஊதியவுடன் மயக்கம் நீங்கி உயிர் திரும்பும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.
www.gkvarmam.blogspot.com

Nanree ayya,,, 🙏🙏🙏
ReplyDeleteBook athanum Velee erunthal vivaram Kirstin...
ReplyDelete