வற்மகண்டி க
காப்பான ஜெனனத்தில் மனுவோர்க்கெல்லாம்
கைகண்ட தலங்குறிகள் கருத்தாய்ச் சொல்வோம்
தாப்பான கஷாயமொடு கிறுதம் எண்ணை
தயவான தடவுதட்டு அமர்த்தலொடு காப்பான குணக்குறிகள் அகக்குறியும் புறக்குறியும்
கூர்மையான ஆப்பான ஆணியைப்போல்
வாப்பாக அறைவேனே நீகேளப்பா
வகைஆயுள் சீர்பாதம் நெற்றிகாப்பே
பொருள்:
உலகத்தில் பிறந்த மானிடருக்கெல்லாம் கைகண்ட இடங்களையும் அவ்விடத்தில் காணப்படும் குறிகுணங்களையும் கருத்தாக சொல்லுவோம்,
கஷாயம் வைக்கும் முறையும் கிறுதம் எனப்படும் நெய் மற்றும் வர்ம எண்ணை காய்ச்சும் முறைகளை கூறுவோம்,வர்ம தடவும் முறைகளையும் வர்மதானங்களை தட்டும் முறைகளையும் அமர்த்தல் செய்யும் முறைகளையும் கூறுவோம்,வர்மபாதிப்பு ஏற்பட்டால் அதன் குணங்குறிகளான உடலினுள்ளே ஏற்படும மாற்றத்தினையும் உடலுக்கு வெளியே ஏற்படும் மாற்றததினையும் கூறுவோம்,பசுமரத்து ஆணிபோல பக்குவமாக கூறுகிறேன் கேட்பீராக, ஆதி சிவனார் பாதம் காப்பு.
-களரி வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755.
No comments:
Post a Comment