Wednesday, 27 November 2019


"  அகக்கண் திறப்பு சூட்சும பயிற்சி( third eye secret activation ) "

★ சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் பயன்படுத்திய அற்புதமான முறை

★ உண்மையான ஸ்பரிச தீட்சை இரகசியம்

★ நமது உடலில் சூட்சும சக்திகளை அதிகரிக்க செய்யும் இரகசிய பயிற்சிகள்,

★ வாசிதந்திர பயிற்சி மூலம் பல அற்புத சக்திகளை பெறும் இரகசிய முறை

★ ஸ்தூல சூட்சுமத்தின் இரகசியங்கள்

★ தெய்வ உபாசனையை பயன்படுத்துவதன் மூலமாக இறைவனுடைய உருவத்தை பௌதிகவடிவில் காணுதல் ,அதன்மூலம் இறைவனுடைய அருளை பரிபூரணமாக பெறும் இரகசியம்

★ அற்புத சித்திகளை பெறும் சூட்சுமம்

★ வாழ்கையில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறும் சூட்சுமம்

★ ஆயுள் ஆரோக்யம் செல்வச்செழிப்பு பெறுவதற்கான சூட்சுமம்

★ நமது குடும்பம் மற்றும் தொழிலில் ஏற்படும்  பிரச்சனைகள்,உடலில் ஏற்படும் நோய்கள் இவைகளை  சரிசெய்யும் சூட்சுமம்

★ மந்திர வார்த்தைகளை பயன்படுத்தும் விதம்

★ சூட்சும சக்தியை உணரும் சூட்சுமம்

★ சூட்சும சக்தி மூலம் உலகிலுள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகள் தாவரங்களை வசியப்படுத்தி  இயக்குதல்.

★ சூரியன் சந்திரன் பூமி மரம் பிரபஞ்சம் இவற்றிலிருந்து சூட்சும சக்தியை கிரகிக்கும் முறை

★ தெய்வீக பொருட்களான எலுமிச்சை, வேப்பிலை, திருநீறு ,மயிலிறகு ,மஞ்சள், தண்ணீர் இவற்றில் சக்தியை ஏற்றி பயன்படுத்தும் முறை

★ ஆறாதார சக்கரங்களை சுத்தி செய்து சக்தி ஏற்றும் முறை

★ சூட்சும லோக சஞ்சார பயண இரகசியம்

★ வீடு,வாகனம் குடும்பத்தினர் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் இரகசிய முறை

★ நவக்கிரக தோஷ பரிகார சூட்சுமம்

★ அனைத்து நோய்களையும் தொடாமல் குணப்படுத்தும் முறை ,எவ்வளவு தூரத்திலிருப்பவரையும் குணப்படுத்தும் சூட்சுமம்

★ இந்த பயிற்சி முறைகளை கற்றுக்கொள்ள மதம் ஒரு தடையில்லை,ஆண் பெண் பேதமில்லை.

★ நாள் - 8.12.2019
    ஞாயிறு காலை 10        மணிமுதல் மற்றும் மாலை 6 மணிவரை

★ இடம்:- ஆதிசக்தி வர்மக்கலை குருகுலம்
தீத்திபாளையம்
கோவை

★ நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
பிரம்மஶ்ரீ
முனைவர். எஸ். கோபாலகிருஷ்ண ஆச்சாரியார்

★ முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி

★  முன் பதிவு - 9487414008 ★






Tuesday, 17 September 2019

உச்சிஷ்ட கணபதி இரகசியம்


Monday, 1 January 2018

சித்த மருந்துகள் செய்முறை



       "நிலாவாரை சூரணம்"

சுக்கு
மிளகு
வாய்விளங்கம்
ஓமம்
வகைக்கு கால் பலம் (9 கிராம்)
நிலாவாரை ஒரு பலம்(35 கிராம்)

மேற்கூறிய ஐந்து சரக்குகளை நன்கு இடித்து சூரணஞ்செய்து காலைமாலை திரிகடியளவு( மூன்று விரல்களில் எடுக்குமளவு) நாட்டு சர்க்கரை சேர்த்து இருபது நாட்கள் சாப்பிடவும்,

மலச்சிக்கல் தீரும்
வயிற்று வலி
வயிற்று உப்புசம்
வாயுதொல்லை
நீங்கும்.

நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755
www.gkvarmam.blogspot.com

Sunday, 31 December 2017

                 சித்த மருந்துகள் செய்முறை

                       "தீபாக்கினி சூரணம்"

சீரகம்
திப்பிலி
மிளகு
இந்துப்பு
இவைகள் வகைக்கு ஒருபலம் (35 கிராம்)
பெருங்காயம்
கருவேப்பிலை
வகைக்கு அரை பலம் (17.500 கிராம்)

பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும், இந்துப்பை தவிர மற்ற சரக்குகளை பொன்வறுவலாக வறுத்து ,பின்னர் அனைத்து சரக்குகளையும் இடித்து துணியில் சலித்து  வைத்துக்கொள்ளவும்.

ஒரு விராகன் எடை( 4 கிராம்)  சூரணத்தை முதலில் சாப்பிடும் சாப்பாட்டுடன் போட்டு காய்ச்சிய பசுநெய்விட்டு பிசைந்து இருவேளை சாப்பிட்டு வரவும்.

வயிற்றுவலி
வயிற்று எரிச்சல்
உஷ்ணவாயு பேதி
அஜீரணம்
ஆகிய நோய்கள் நீங்கும்.

இச்சா பத்தியம்

நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.
www.gkvarmam.blogspot.com



Friday, 29 December 2017

            "அக்கி குணமாக இலகு வைத்தியம்"





மணத்தக்காளி செடியின் இலைகளை பிழிந்து சாறெடுத்து அதைப்பூசி வரவும் அக்கி காய்ந்து குணமாகும்,
அக்கி தோன்றியவுடன் கடைகளில் கிடைக்கும் பூங்காவியை தண்ணீரில் கலந்து பூசி வந்தால் காய்ந்து ஆறிவிடும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.
www.gkvarmam.blogspot.com.

Wednesday, 27 December 2017

                          "வற்மகண்டி" ௪



செப்பினோம் இன்னமொரு செய்திகேளு
செயலான கடைக்கண்ணின் இறைக்குகீழே
நட்புடனே அதில்தானே நட்சத்திரகாலம்
நன்மையுடன் அடிபட்டால் குணத்தைகேளு
கப்புடனே கண்ணுரெண்டும் சிவந்துகொண்டு
கடிசீராய் நாசியில் நீர் ஒழுகும்பாரு
செப்பினார் நாழிகைதான் பதினெட்டுக்குள்
செயலாகப் பார்த்து நீ அறியவென்றே

விளக்கவுரை :-
                           இன்னும் ஒரு வர்மத்தினை கூறுகிறேன் கேட்பாயாக, நெற்றிப்பொட்டு பகுதியை நோக்கியிருக்கும் கடைக்கண்ணின் எழும்பு பகுதியிலிருந்து நெல்லிடை அளவுக்கு கீழாக அமைந்துள்ளது நட்சத்திரகாலம் என்னும் வர்மம்,இவ்விடத்தில் அடிபட்டால் கண்களுக்குள் நட்சத்திரம் பறக்கும், கண்கள் இரண்டும் சிவந்துவிடும்,மூக்கின் வழியாக நீர் ஒழுகிக்கொண்டே இருக்கும், மாத்திரைக்கு மீறி அடிபட்டால் உயிர் போய்விடும், ஏழு மணிநேரத்திற்குள் இளக்குமுறையை கையாள வேண்டும்,இல்லையெனில் அசாத்தியமாகி விளைவுகள் பெருகும்.

பாடினதோர் நாழிகைக்கு முன்னதாக
பண்பாக இளக்குமுறை பகரக்கேளு
நாடியே மறுபுறத்தில் கைவிரித்து
நன்றாகவேயடிக்க மாத்திரைகேளுகை
நாடியே ஓங்கியேயோர் சாணளவில் தானும்
அடித்திருத்தி யெடுத்துக்கொண்டுகேளு
தேடியே சுக்கு வைத்துக்காதுரெண்டும்
திறமாகவூத வுயிற்றிரும்பும்பாரே.

விளக்கவுரை :-
                           ஏழுமணி நேரத்திற்கு முன்னதாக செய்ய வேண்டிய இளக்குமுறையினை கூறுகிறேன் கேள்,எந்த கண்பகுதியில் அடிபட்டதோ அதற்கு நேர் பின்புறமாக இடதுஉள்ளங்கையை அவ்விடத்தில் வைத்து வலது கையை விரித்து ஒரு சாண் அளவு இடைவெளி விட்டு அடிக்கவும் ,அதன்பின்னர் நெற்றியிலிருந்து கீழாக இரு கைகளாலும் தடவி விடவும் ,சுக்கை தோல் சீவிவிட்டு வாயில் போட்டு மென்று அதன் வேகத்தை இரு காதுகளிலும் ஊதவும்,ஊதியவுடன் மயக்கம் நீங்கி உயிர் திரும்பும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.
www.gkvarmam.blogspot.com

Tuesday, 26 December 2017

"பெண்களுக்கு உதிரக்கட்டு நீர்க்கட்டு குணமாக இலகு வைத்தியம்"



கர்பப்பையில் நீர்க்கட்டு  உதிரக்கட்டு ஏற்பட்டால் சந்தான விருத்தி உண்டாகாது, இதற்கு கல்யாண முருங்கை பூவை ஒரு  கைப்பிடியளவு சுத்தம் செய்து 21 மிளகு சேர்த்து நன்கு மைய  அரைத்து காலைமாலை சுண்டைக்காயளவு சாப்பிட்டு வர கட்டுகள் நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755
www.gkvarmam.blogspot.com

Monday, 25 December 2017


                      "வேம்பின் மருத்துவம்"



வேப்பம்பட்டை:- சருமப்படை தேகப்புண் இவற்றை குணமாக்கும்.(கியாழம் வைத்து குடிக்கவும்)

வேப்பிலை:- வீக்கத்தை குறைக்கும் இரத்தசுத்தி செய்யும்.(அரைத்த விழுது விழுங்கவும்)

வேப்பம்பழம்:- மூளைக்கு பலத்தை கொடுக்கும்,சுவாச இரணத்தை அழிக்கும்.(சப்பி சாப்பிடவும்)

வேப்பம்பூ:- இரத்தத்தை சுத்தி செய்யும்.(பழம் சர்க்கரை சேர்த்து சாபமிடவும்)

வேம்பின் வேர்:- முறை சுரத்தை போக்கும், இரத்த சுத்தியாகும்.(கியாழம் வைத்து குடிக்கவும்)

வேப்பம் பிசின்:- தாது விருத்தி செய்யும்,மூளைக்கு பலத்தை கொடுக்கும்.(நீரில் ஊறவைத்து குடிக்கவும்)
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755.