Sunday, 31 December 2017

                 சித்த மருந்துகள் செய்முறை

                       "தீபாக்கினி சூரணம்"

சீரகம்
திப்பிலி
மிளகு
இந்துப்பு
இவைகள் வகைக்கு ஒருபலம் (35 கிராம்)
பெருங்காயம்
கருவேப்பிலை
வகைக்கு அரை பலம் (17.500 கிராம்)

பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும், இந்துப்பை தவிர மற்ற சரக்குகளை பொன்வறுவலாக வறுத்து ,பின்னர் அனைத்து சரக்குகளையும் இடித்து துணியில் சலித்து  வைத்துக்கொள்ளவும்.

ஒரு விராகன் எடை( 4 கிராம்)  சூரணத்தை முதலில் சாப்பிடும் சாப்பாட்டுடன் போட்டு காய்ச்சிய பசுநெய்விட்டு பிசைந்து இருவேளை சாப்பிட்டு வரவும்.

வயிற்றுவலி
வயிற்று எரிச்சல்
உஷ்ணவாயு பேதி
அஜீரணம்
ஆகிய நோய்கள் நீங்கும்.

இச்சா பத்தியம்

நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.
www.gkvarmam.blogspot.com



Friday, 29 December 2017

            "அக்கி குணமாக இலகு வைத்தியம்"





மணத்தக்காளி செடியின் இலைகளை பிழிந்து சாறெடுத்து அதைப்பூசி வரவும் அக்கி காய்ந்து குணமாகும்,
அக்கி தோன்றியவுடன் கடைகளில் கிடைக்கும் பூங்காவியை தண்ணீரில் கலந்து பூசி வந்தால் காய்ந்து ஆறிவிடும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.
www.gkvarmam.blogspot.com.

Wednesday, 27 December 2017

                          "வற்மகண்டி" ௪



செப்பினோம் இன்னமொரு செய்திகேளு
செயலான கடைக்கண்ணின் இறைக்குகீழே
நட்புடனே அதில்தானே நட்சத்திரகாலம்
நன்மையுடன் அடிபட்டால் குணத்தைகேளு
கப்புடனே கண்ணுரெண்டும் சிவந்துகொண்டு
கடிசீராய் நாசியில் நீர் ஒழுகும்பாரு
செப்பினார் நாழிகைதான் பதினெட்டுக்குள்
செயலாகப் பார்த்து நீ அறியவென்றே

விளக்கவுரை :-
                           இன்னும் ஒரு வர்மத்தினை கூறுகிறேன் கேட்பாயாக, நெற்றிப்பொட்டு பகுதியை நோக்கியிருக்கும் கடைக்கண்ணின் எழும்பு பகுதியிலிருந்து நெல்லிடை அளவுக்கு கீழாக அமைந்துள்ளது நட்சத்திரகாலம் என்னும் வர்மம்,இவ்விடத்தில் அடிபட்டால் கண்களுக்குள் நட்சத்திரம் பறக்கும், கண்கள் இரண்டும் சிவந்துவிடும்,மூக்கின் வழியாக நீர் ஒழுகிக்கொண்டே இருக்கும், மாத்திரைக்கு மீறி அடிபட்டால் உயிர் போய்விடும், ஏழு மணிநேரத்திற்குள் இளக்குமுறையை கையாள வேண்டும்,இல்லையெனில் அசாத்தியமாகி விளைவுகள் பெருகும்.

பாடினதோர் நாழிகைக்கு முன்னதாக
பண்பாக இளக்குமுறை பகரக்கேளு
நாடியே மறுபுறத்தில் கைவிரித்து
நன்றாகவேயடிக்க மாத்திரைகேளுகை
நாடியே ஓங்கியேயோர் சாணளவில் தானும்
அடித்திருத்தி யெடுத்துக்கொண்டுகேளு
தேடியே சுக்கு வைத்துக்காதுரெண்டும்
திறமாகவூத வுயிற்றிரும்பும்பாரே.

விளக்கவுரை :-
                           ஏழுமணி நேரத்திற்கு முன்னதாக செய்ய வேண்டிய இளக்குமுறையினை கூறுகிறேன் கேள்,எந்த கண்பகுதியில் அடிபட்டதோ அதற்கு நேர் பின்புறமாக இடதுஉள்ளங்கையை அவ்விடத்தில் வைத்து வலது கையை விரித்து ஒரு சாண் அளவு இடைவெளி விட்டு அடிக்கவும் ,அதன்பின்னர் நெற்றியிலிருந்து கீழாக இரு கைகளாலும் தடவி விடவும் ,சுக்கை தோல் சீவிவிட்டு வாயில் போட்டு மென்று அதன் வேகத்தை இரு காதுகளிலும் ஊதவும்,ஊதியவுடன் மயக்கம் நீங்கி உயிர் திரும்பும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.
www.gkvarmam.blogspot.com

Tuesday, 26 December 2017

"பெண்களுக்கு உதிரக்கட்டு நீர்க்கட்டு குணமாக இலகு வைத்தியம்"



கர்பப்பையில் நீர்க்கட்டு  உதிரக்கட்டு ஏற்பட்டால் சந்தான விருத்தி உண்டாகாது, இதற்கு கல்யாண முருங்கை பூவை ஒரு  கைப்பிடியளவு சுத்தம் செய்து 21 மிளகு சேர்த்து நன்கு மைய  அரைத்து காலைமாலை சுண்டைக்காயளவு சாப்பிட்டு வர கட்டுகள் நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755
www.gkvarmam.blogspot.com

Monday, 25 December 2017


                      "வேம்பின் மருத்துவம்"



வேப்பம்பட்டை:- சருமப்படை தேகப்புண் இவற்றை குணமாக்கும்.(கியாழம் வைத்து குடிக்கவும்)

வேப்பிலை:- வீக்கத்தை குறைக்கும் இரத்தசுத்தி செய்யும்.(அரைத்த விழுது விழுங்கவும்)

வேப்பம்பழம்:- மூளைக்கு பலத்தை கொடுக்கும்,சுவாச இரணத்தை அழிக்கும்.(சப்பி சாப்பிடவும்)

வேப்பம்பூ:- இரத்தத்தை சுத்தி செய்யும்.(பழம் சர்க்கரை சேர்த்து சாபமிடவும்)

வேம்பின் வேர்:- முறை சுரத்தை போக்கும், இரத்த சுத்தியாகும்.(கியாழம் வைத்து குடிக்கவும்)

வேப்பம் பிசின்:- தாது விருத்தி செய்யும்,மூளைக்கு பலத்தை கொடுக்கும்.(நீரில் ஊறவைத்து குடிக்கவும்)
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755.

Sunday, 24 December 2017

வர்மக்கலை பயிற்சி வகுப்பு

 


                காயத்தினால் வரும் வலி தீர



'மருதாணி இலைகளை வேகவைத்து அதன் நீரை கொண்டு காயங்கள் வீங்கங்களை கழுவி வர வலி உபாதை குறையும்
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்ஶ்ர.கோபாலகிருஷ்ணன்
9894285755

Saturday, 23 December 2017


கூந்தல் நீண்டு வளர்வதற்கு இலகு                 வைத்தியம்



செம்பருத்தி பூக்கள் 50 எடுத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணையிலிட்டு காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு தலைக்கு தேய்த்து வர கூந்தல் நீண்டு வளரும் மூளையும் கண்களும் குளிர்ச்சி பெறும், பொடுகு ஏற்படாது.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755
www.gkvarmam.blogspot.com

Friday, 22 December 2017

              "யந்திரம் வரையும் இரகசியம்"




யந்திரம் எழுதும் முன்னர் தகட்டை பரிசோதித்து கொள்ளவும், ஓட்டை கீறல் விரிசல் கசங்கல் இருக்ககூடாது.

யந்திரம் வரையும் முன்னரே தேவையான அளவு வெட்டிக்கொள்ள வேண்டும், வரைந்தபின் வெட்டக்கூடாது.

யந்திரம் எழுதும்போது அதற்குரிய திசையை நோக்கி உட்கார்ந்து எழுத வேண்டும்.

யந்திரம் வரையும் போது அதற்குரிய மூலமந்திரத்தை செபித்தவாறு எழுதினால் மிகுந்த பலனை அளிக்கும்.

யந்திரங்கள் மொத்தமாக எழுதி வைத்துக்கொண்டு பின் தேவையானபோது எடுத்து பூஜை செய்து கொடுக்கலாம்.

மாம்பலகை இரண்டெடுத்து ஒன்றின்மீது நாம் அமர்ந்து கொண்டும்,சற்று உயரமாயுள்ள ஒன்றின் மீது யந்திரத்தை வைக்கவும் வேண்டும்.

யந்திரங்கள் எழுதும்போதும் மந்திரங்கள் செபிக்கும்போதும் மாம்பலகையின் மீது உட்கார்ந்து செய்தல் வேண்டும்.
சுவாமி படங்கள் மற்றும் யந்திரங்கள் கிழக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும்.

பூசையின்போது இடையில் மற்றவர்களிடம் பேசுவது செல்போன் உபயோகித்தல் கூடாது.

மந்திரங்கள் செபிக்கும்போது தங்கள் கண்களை மூடி தங்கள் காதுகளுக்கு மட்டும் கேட்கின்ற மாதிரி மந்திரங்களை செபித்தல் போதுமானது.

மந்திரத்தை செபிப்பதற்கு முன்னர் அம்மந்திரத்தை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.

சகலவிதமான வசிய காரியங்களுக்கும் கிழக்கு நோக்கி அமர்ந்து செபம் செய்ய வேண்டும்.

சகலவிதமான தெய்வ சக்திகளையும் ஞானத்தையும் பெற வடக்கு நோக்கி செபம் செய்ய வேண்டும்.

எதிரிகளை அடக்க அழிக்க தெற்கு நோக்கி அமர்ந்து செபம் செய்ய வேண்டும்.

மந்திர உருவேற்ற காலை 3.30 மணிமுதல் 6.00 மணிவரை மற்றும் மாலை 6.00 மணிக்கு மேல் செய்ய சிறந்த பலனை கொடுக்கும்.

சகலவிதமான மந்திரங்கள் செபிக்க ருத்திராட்ச மாலை சிறந்தது மாலையை மேல்நோக்கி உருட்டினால் மற்றவர்களுக்கும் ,கீழ் நோக்கி உருட்டி செபிக்க நமக்கும் பலனளிக்கும்.

யந்திரம் வரைந்து தகட்டை பலகை மீது வைத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி குங்குமம் தடவி யந்திரத்தின் மேல் பிழிந்து பலி கொடுக்கவும், பின் தண்ணீரில் கழுவி பால் பன்னீர் மஞ்சள்நீர் இளநீர் கொண
www.gkvarmam.blogspot.com

Wednesday, 20 December 2017

                          "நாடி சாஸ்திரம் " உ




நாடிதுடிப்பின் எண்ணிக்கை வயதிற்கேற்ப மாறுதல் அடையும், அதாவது ஒரு நிமிடத்திற்கு பிறந்த குழந்தையின் துடிப்பு 140, குழந்தைகளுக்கு 100, பாலபருவத்தில் 120 முதல் 130 வரை,வாலிப வயதில் 90,முழுப்பருவ ஆணுக்கு70 முதல் 75,முழுப்பருவ பெண்ணுக்கு 75 முதல் 80 வரை,தளர்ந்த பருவத்தில் 80 ,வயதானபின் 75, மற்றும் அமர்ந்திருந்தால் 40, நின்றால் 79,படுக்கையில் 67 தடவையும் சாதாரணமாக நாடி துடிக்கும், இதில் கோதுமையளவு ஒரு மாத்திரை வாத நாடியும் ,அரை மாத்திரையளவில் பித்த நாடியும்,கால் மாத்திரையளவில் கப நாடியும் நடத்தலே நலமாகும்,இதில் காணும் மாறுதல்களினால் நோயினை கணித்து அறியலாம்.

நாடித்துடிப்பினை சித்திரை வைகாசியில் உதயத்திலும்,ஆனி ஆடி ஐப்பசி கார்த்திகையில் மதியத்திலும்,மார்கழி மாசியில் மாலையிலும்,பங்குனி ஆவணி புரட்டாசியில் இரவிலும் முறையே தெளிவாக அறியலாம், மேலும் காலை 6 மணிமுதல் 10 வரை வாதமும்,10 முதல் 2 வரை பித்தமும் ,2 முதல் 6 வரை கபமும் மிக்க எழுச்சியுடனிருக்கும்,ஆகவே அந்தந்த நேரத்தில் அவ்வவ்வற்றை  கண்டறிதல் சுலபமாகும் ,இங்கனமே மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை உள்ள இரவு நேரத்திற்கும் கிரமப்படி கண்டறிதல் வேண்டும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.
                          "நாடி சாஸ்திரம்"-க




நமது இருதயத்தின் இடது சடாரம் குவியும் பொழுது இரத்தம் தள்ளப்பட்டு கண்டரையின் மூலம் சகல நாளங்களுக்கும் பாய்வதால் நாளங்கள் விரியும்-மீண்டும் இடது சடாரம் விரியும்பொழுது குருதி இழுக்கப்படுவதால் நாளங்கள் சுருங்கும்,இவ்விதம் இருதயம் விரியவும் சுருங்கவும் இருப்பதால் இதனைச் சேரந்த நாடி நரம்புகளும் விரிந்து சுருங்கும் தன்மையுடையதாக இயங்கி இருதய நடையின் மாறுதல்களைத் தெரிவிக்கிறது,இருதயத்தின் நிலையும் உடல் நிலைக்கேற்ப மாறுபாடடைவதால் அவற்றை நாம் நாடித்துடிப்பின் மூலம் அறிய முடிகிறது.

நாடித்துடிப்பினை தசநாடி இருப்பிடங்களிலும் உணரலாம் எனினும் இதில் கரமே எளிதிலும் தெளிவுடனும் பார்க்கத்தக்கது, கைகளில் அறிவதே நலமாகும்,எனவே ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டும்,முன்கையின் ஆரை எலும்பின் மேற்புறமுள்ள பெருநாடியை மணிக்கட்டிற்கு கீழே பெருவிரலின் அடியில் ஒரு அங்குலம் கீழே மூன்று விரல்களால் மாறி மாறி மெதுவாக அழுத்தியும் தளர்த்தியும் பார்க்க வேண்டும், அவ்வமயம் நமது ஆட்காட்டி விரலில் உணர்வது வாதம் எனவும் நடுவிரலில் உணர்வது பித்தம் எனவும் மோதிரவிரலில் உணர்வது சிலேத்துமம் எனவும் அறியவும், மற்றும் பெருவிரல் சிறுவிரலில்  பூதநாடியும் ,குருநாடி ஐந்து விரல்களிலும் சேர்ந்து நிற்கும், இதில் எண்ணிக்கை ,நடை ,அழுத்தம், தன்மை, எழுச்சியின் அளவு  இவற்றை அறிய வேண்டும்.
நன்றி

Tuesday, 19 December 2017

             'ஹனுமந்தா வாயு சூரணம்'

மலக்கட்டு,வாயு தொல்லைகள் நீங்கும், தொந்தி குறையும்.உடல் எடைகுறையும்.

தினந்தோறும் படுக்கும்போது ஒன்னரை தேக்கரண்டி அளவு பொடியை சுடுநீரில் கலந்து குடிக்கவும்,இரவு உணவு 6 மணிக்கு சாப்பிட்டு விடவேண்டும்.

ஒரு டப்பா:- 100 ரூ.
                          'சம்ஹார தைலம்'

தலைவலி,பல்வலி,மூச்சிரைப்பு,மயக்கம், கால்கைவலிப்பு ஆகியவற்றை குணமாக்கும்.

இதை பெரியவர்கள் மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும்,குழந்தைகளிடம் கொடுத்துவிடகூடாது,தலைவலி மூச்சிரைப்பு மயக்கம் கால்கைவலிப்பு முதலியவைகளுக்கு முகர்ந்து பார்க்கவும் ,தலையிலும் தேய்த்துக்கொள்ளலாம்,பல்வலிக்கு பல்லில் ஒரு சொட்டு விடலாம்.


ஒரு பாட்டில்:- 100 ரூ.

Sunday, 17 December 2017

                                 தயிர்



தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிட அது மூளையை குளிர்ச்சியாக வைத்திருக்கும், எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்து தயிரில் நிறைய இருக்கிறது, குளிப்பதற்கு முன் தலையில் தயிரை தடவிக்கொண்டு குளித்தால் பொடுகு நீங்கும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755


                                   வாழைப்பழம்


வாழைப்பழத்தில் அயச்சத்து அதிகமிருக்கிறது இரவு படுக்கைக்கு முன் ஒரு பழம் சாப்பிட்டு பால் சாப்பிட்டு வந்தால் மூளை பலப்படும்,மலச்சிக்கலை தீர்க்கும், போகசக்தியுண்டாகும், வாழைப்பழத்தில் நம்நாட்டு  பழங்கள் மட்டுமே நல்ல பயனளிக்கும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.


           "வர்ம அடிமுறை பயிற்சி வகுப்பு"               
  
     

நடத்துபவர்:-
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்

இடம்:-
ஆதிசக்தி வர்மக்கலை வைத்தியசாலை
தீத்திபாளையம்
கோவை

நாள்:-
24-12-2017,ஞாயிற்றுக்கிழமை
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

முன்பதிவு மற்றும் முழுவிபரம் பெற அழைக்கவும்:-
சுபாஷ் 9487414008.


Thursday, 14 December 2017

 வனமூலிகையின் சாபவிமோசனம்



வன மூலிகைகள் எதுவாயினும் அதன் சாபத்தை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் தான் பிறந்த கிழமையும் நட்சத்திரமும் ஒன்று கூடும் தினம் பார்த்து நமக்கு வேண்டிய மூலிகையின் அருகில் சென்று 'நங் மங் நமசிவய' என்று 108 உரு செபித்து அம்மூலிகையின் வேரைப்பிடுங்குவதோ இலைகளை பறிப்பதோ நன்று,கீழே குறிப்பிட்டபடி மூலிகைக்கு உயிர் கொடுத்து நகம் படாமல் பறித்திட நன்மைபயக்கும் ,மூலிகைக்கு உயிர் கொடுக்கும் முறை மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து மஞ்சள் நீர் தெளித்து மேலே கூறியபடி மந்திரம் செபித்து அதற்கு மூவர்ண காப்பு கட்டி(சிவப்பு ,கருப்பு ,பச்சை,) தீப தூபம் காட்டி தேங்காய் உடைத்து பூசணிக்காய் பலி கொடுத்து பால்பொங்கல் படையலிட்டு 'ஓம் சர்வ மூலி சாபநிவர்த்தி, உனதுடலில் உயிர் நின்று என்னைக் காக்க சுவாகா' என்று 108 உரு கொடுத்து மூலிகையை பிடுங்கி வந்தால் சகல வேலைகளுக்கும் உபயோகப்பட்டு நமக்கு நற்கதியை அளிக்கும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.
                   "சிலம்பம் பயிற்சி வகுப்பு"

மாதமிருமுறை சிலம்பம் பயிற்சி நடைபெற உள்ளது, விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட அலைபேசி எண்ணை தொடர்புகொண்டு வரவும்

பயிற்சி நடைபெறும் இடம்:-  ஆதிசக்தி                  வர்மக்கலை வைத்தியசாலை,தீத்திபாளையம், கோவை.

நாள்:- 17-12-2017,ஞாயிற்றுக்கிழமை,காலைமுதல் மாலைவரை

பயிற்சி நடத்துபவர்:- ஆசான் கோதா காளிமுத்து வாத்தியார்

முன்பதிவு மற்றும் விபரம் பெற அழைக்கவும்:- சுபாஷ்-9487414008.
நன்றி.

Wednesday, 13 December 2017

                          விந்து தம்பனம்



வாழைக்காய்க்குள் ஊமத்தன் விதைகளை செலுத்தி சுட்டு எடுத்து ஆறியபின் எடுத்து பத்து விதைகளை தின்று பசும்பால் அருந்தி மூன்றுமணி நேரம் சென்றபின் புணர விந்து தம்பனமாகும்,மாற்று புளி தின்ன விந்திறங்கும்
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755. 
வர்மக்கலை அமானுஷ்ய இரகசியம்



Tuesday, 12 December 2017

"பெண்களுக்கு வரும் மனநோய் நீங்க இலகு வைத்தியம்"




நரம்பு பலவீனமான பெண்களுக்கு ஏற்படும் மனநோயை பேய் பிடித்தாடுவதாக கூறுவர்,இதை ஹிஸ்டீரியா என்றும் அழைப்பர், இதற்கும் இழுப்பு மற்றும் வாதநோய் இவைகளுக்கும் பொன்னாவாரை இலை வேர் பூ முதலியவற்றை 40 கிராம் வீதம் எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு பாதியாக காய்ச்சி வடித்து 25 மில்லி ஒருவேளை வீதம் காலை மதியம் இரவு மூன்று வேளை கொடுத்துவர நல்ல குணம் தெரியும் ,அஜீர வாயு ரோகமும் குணமாகும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755
www.gkvarmam.blogspot.com
விளக்கு ஏற்றும் இரகசியங்கள்

★விளக்கு திரி★

★பஞ்சுத்திரி-வீட்டில் மங்களம் நிலைக்கும்
★தாமரைதண்டுதிரி-முன்வினை பாவம் நீக்கும்,செல்வம் தரும்
★வாழைத்தண்டுதிரி-தெய்வகுற்றம் நீங்கி மனச்சாந்தி தரும் புத்திரப்பேறு உண்டாகும்
★வெள்ளெருக்கன் பட்டைதிரி-வறுமையைப்போக்கும் கடன் தொல்லை தீரும் பெருத்த செல்வம் சேரும்

★விளக்கு திசை★

★வடக்கு-தொழில் அபிவிருத்தி செல்வம் சேரும்
★கிழக்கு-சகல சம்பத்தும் கிடைக்கும்
★மேற்கு-கடன் தீரும் நோய் அகலும்
★தெற்கு-இந்த திசையில் தீபம் ஏற்ற கூடாது

★விளக்கு எண்ணை★

★பசுநெய்-மோட்சம் கிடைக்கும் பாவங்கள் தீரும் மகாலட்சுமி அருள் கிடைக்கும்
★ஆமணக்கெண்ணை-குடும்ப சுகம் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் 
★இலுப்பையெண்ணை-குலதெய்வ அருள் கிடைக்கும் முன்னோர் சாபங்கள் முற்பிறவி பாவங்கள் தீரும்
★நல்லெண்ணை-கடன்கள் தீரும் நோய்கள் அகலும்
★தேங்காயெண்ணை-வினாயகருக்கு மட்டும் தான் இதில் தீபம் ஏற்ற வேண்டும் திருமண தடை நீங்கும்
★முக்கூட்டு எண்ணெய்-பசுநெய் ஆமணக்கெண்ணை இலுப்பையெண்ணை மூன்றும் சம அளவில் கலந்து தீபம் ஏற்றுவதால் தேவ ஆகர்ஷணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும் செல்வம் சேரும்  பசுநெய்யுடன் நல்லெண்ணெய் கலக்க கூடாது கடலையெண்ணை சன் ஆயில் கலப்பு எண்ணை கொண்டு தீபம் ஏற்றினால் தரித்திரம் உண்டாகும் தெய்வசாபம் வரும்.

பசுநெய்  ஆமணக்கெண்ணை வேப்பெண்ணை இலுப்பையெண்ணை தேங்காயெண்ணை இவ்வைந்தெண்ணை சேர்த்து விளக்கிட்டு ஒரு மண்டலம் பூஜை செய்துவர தேவியின் அருள் சக்தி உண்டாகும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755.



சூட்சும சரீர இரகசியங்கள்



புளியமரத்து புல்லுருவி இரகசியம்


வர்மக்கலை அடிமுறை



வர்மக்கலை கத்திப்பிடிமுறை



                  ஒரு மண்டலம் விபரம்


ஒரு மண்டலம் என்பது நாற்பத்தெட்டு நாட்கள்,
நவகிரகங்கள் ஒன்பதையும் கடந்து
இராசிகள் பன்னிரண்டையும் கடந்து
நட்சத்திரங்கள் இருபத்தேழையும் கடந்து செல்வதே ஒரு மண்டலம் எனப்படும், அதன் விபரம்
9+12+27=48
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755

வர்மக்கலை பிடிமுறை இளக்கம்





Monday, 11 December 2017

முசுமுசுக்கை மூலிகை  இரகசியம் 




                   மூலிகை ரகசியம் வேலிப்பருத்தி


           வர்மக்கலை குழந்தைகள் வைத்தியம்


                          வர்மக்கலை பிடிமுறை


                        வர்மக்கலை பிடிமுறைகள்


                        உளுந்து கஞ்சி செய்முறை


                          வர்மக்கலை அடிமுறை


      வர்மக்கலை அறிவாளுக்கான தடுப்புமுறை


                               

                         திருநீர் அணிவதின் ரகசியம்

 

                                                            

                                        மூலிகை ரசமணி

           

                                   

             வர்மக்கலை அடிமுறை பயிற்சி வகுப்பு



வர்மக்கலை மாதாந்தர பயிற்சி வகுப்பு

இடம்:-
            ஆதிசக்திவர்மக்கலைவைத்தியசாலை,தீத்திப்பாளையம்,கோயம்புத்தூர்

நாள்:-
          24.12.2017 மார்கழி மாதம் ஒன்பதாம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

நேரம்:-
            காலை ஒன்பதுமணி முதல் மாலை ஆறுமணி வரை.

மதிய உணவு வழங்கப்படும்.

பயிற்சி அளிப்பவர்:-
                                    தலைமை  வர்மக்கலை ஆசான்
                                         எஸ்.கோபாலகிருஷ்ணன்

முன்பதிவு மற்றும் விபரங்கள் பெற
அனுகவும்:-
                     சுபாஷ்
                   9487414008
                                                                             நன்றி


                                                   வர்மக்கலை அடிமுறை


அனுபவ இலகு வைத்திய முறைகள்

வர்மக்கலை படுபயங்கரமான அடிமுறை



உள்ளொளி தியானம்


சிலம்பாட்டம் பகுதி-6


குழந்தைகளுக்கான வர்மக்கலை இளக்குமுறை



 காது பிரச்சனைகளுக்கு நாயுருவி தைலம்


வாளுக்கான வர்மக்கலை பிடிமுறை



         வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
                          மின்னூல்

https://files.acrobat.com/a/preview/fb05bc81-59a6-4754-9763-618735ad385e
                                "வற்மகண்டி" ௩

'நெற்றிநடு புருவத்திலிருந்து தானே
நேராக நெல்லிடைக்கும் தாழ்வதாக
உற்றதொரு திலர்தவர்மம் கொண்டால் கேளு
உண்மையிலே அடிகொண்ட ஆளுதானே
அற்றதலை அண்ணாந்து நிமிர்ந்திருக்கும்
அறிந்துபார் முற்றுமே நாழிகைதான்
உற்றதொரு மூன்றே முக்காலுக்குள்
உரைத்தனென்று குருமுனி மொழிந்தார்தானே'-3

விளக்கவுரை:-
                          இரண்டு புருவங்களுக்கு மத்தியிலிருந்து ஒரு நெல் அளவு கீழே அமைந்துள்ள வர்மம் 'திலர்தகாலம்',இந்த வர்மத்தில் அடிபட்டால் மயங்கி அண்ணாந்து வானம் பார்த்து கிடப்பான்,அடிபட்டவுடன் ஒன்றரை மணி நேரத்தில் இளக்குமுறை செய்துவிடவேண்டும் இல்லையெனில் குணமாக்குவது கடினம் என்று குருமுனிவராகிய அகத்தியர் பெருமான் கூறினார்.

'தானான நாழிகைதான் கழிக்கும் முன்னே
தயவுடனே இளக்குமுறை தன்னைக் கேளு
தானான சிரசில் ஓரடியடித்து
கண்டமுடன் தடவிக் கருணைகூர்ந்து
ஈனான நெஞ்சில் ஓரடியடித்து
ஈசனை நினைத்து நீ செய்தாயானால்
ஊனான உண்டான வர்மம் தீர்ந்து
உடன் எழுந்திருக்கும் என்றுமுனி இயம்பினாரே'

விளக்கவுரை:-
                          அடிபட்ட ஒன்றரை மணிக்குள்ளே எப்படி இளக்குமுறை செய்யவேண்டும் என்று கூறுகிறேன் கேள்,ஈசனை மனதார வேண்டிக்கொண்டு அடிபட்டவரை எழுந்து அமரவைத்து தலை உச்சியில் மூன்று தட்டுதட்டி ,கழுத்திலிருந்து கீழாக தோள்பட்டை வரை தடவிவிட வேண்டும்,அதன்பின் நெஞ்சில் மூன்றுமுறை தட்டிவிடவேண்டும்,உடனே அடிபட்டவர் எழுந்துவிடுவார் என்று அகததியர் பெருமான் கூறியுள்ளார்.

நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755.
www.gkvarmam.blogspot.com





                           "வற்ம கண்டி உ"

செய்யுள்:-

"பாரப்பா கணபதியும் கந்தன் பாதம்
பரிவான சந்திரனை தலைமேல் கொண்டோன்
சீரப்பா சீர்பாதம் மறவாமல் தான்
வற்ம கண்டி சிறப்புடனே அறுபதையும் குறுக்கிப்பாட
நேரப்பா இருதயமது கலங்காமல்தான்
நீங்காமலே இருந்து குடிகொண்டேதான்
சீர்பாதம் குருமுனிக்கும் புத்திசொன்ன
சிறந்த மயில் வாகனனே காப்புத்தானே"

விளக்கவுரை:-

கணபதியினுடைய பாத்தினையும் கந்தனுடைய பாதத்தினையும் வணங்கி, சந்திரனை தலைமேல் சூடியிருக்கும் சிவனார் பாதத்தினையும் வணங்கி வற்மகண்டி என்னும் இந்நூலை அறுபதாக குறுக்கி  பாடினேன்,மனம் கலங்காமல் ஒருமனதாய் இருந்து இந்நூலில் காணும் முறைகளை நுணுக்கமாய் காண்பீராக,அகத்திய மாமுனிக்கு உபதேசம் செய்த எம்பெருமான் முருகப்பெருமான் இந்நூல் படிப்போரை காத்து இரட்சித்து அருள்புரிவாராக !

நன்றி
களரி வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.
சீப்பிடிக்க நாரியருட னினைந்து
நாப்பிளக்க பொய்யுரைத்தே வீழ்ந்திட்டு
பூப்படைத்த கண்ணினையுங்
கெடுத்தே

மூப்பதுவுமே வந்தெய்யும்
வழியறியீர்
ஆப்பசைத்த குரங்கதின்
குறிகாணீர்
நீப்பிழைத்த பிழைப்பெதுவும் காணீர்.
-கோ.
                "வர்ம ஒடிமுறிவு மருத்துவம்"

*சுக்கு,
*வசம்பு,
*யாழிய,
*சதகுப்பை,
*கட்டிச்சன்னார்,
*காசுக்கட்டி,
*கொம்பரக்கு,
*வெள்ளைக்குந்திரிக்கம்
*வெந்தயம்,
உளுந்து,
*பச்சரிசி,
இவைகளை 50 கிராம்
 வீதம் எடுத்து
முட்டை வெள்ளை கருவிட்டு அரைத்து துணியில் பிரட்டி சுற்றி பற்றிடவும்.
அடிபட்ட வேதனை,வீக்கம், தள்ளல்,சதைவு,நீர்க்கட்டு தீரும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755.
வர்மக்கலை பிடிக்கான மாற்றுமுறை


புழுவெட்டு ,வழுக்கை நீங்க சித்தமருத்துவம

தலையில் பூச்சி கடியினாலோ அல்லது புண் பொடுகு ஏற்பட்ட பின்னோ வட்ட வட்டமாக சொட்டை விழும் அதில் முடி முளைக்காது,இதற்கு கரியபோளத்தை(நாட்டுமருந்து கடையில் கிடைக்கும்) காடி (வினிகர்) விட்டு அரைத்து சொட்டையில் தேய்க்கவும்,15 நாட்களில் கட்டாயம் முடி முளைக்கும் ,இந்தமுறையில் வழுக்கையிலும் முடி வளரும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755
www.gkvarmam.blogspot.com

Sunday, 10 December 2017

                         வற்மகண்டி க




காப்பான ஜெனனத்தில் மனுவோர்க்கெல்லாம் 
கைகண்ட தலங்குறிகள் கருத்தாய்ச் சொல்வோம்
தாப்பான கஷாயமொடு கிறுதம் எண்ணை 
தயவான தடவுதட்டு அமர்த்தலொடு காப்பான குணக்குறிகள் அகக்குறியும் புறக்குறியும் 
கூர்மையான ஆப்பான ஆணியைப்போல்
வாப்பாக அறைவேனே நீகேளப்பா 
வகைஆயுள் சீர்பாதம் நெற்றிகாப்பே

பொருள்:
உலகத்தில் பிறந்த மானிடருக்கெல்லாம் கைகண்ட இடங்களையும் அவ்விடத்தில் காணப்படும் குறிகுணங்களையும் கருத்தாக சொல்லுவோம்,
கஷாயம் வைக்கும் முறையும் கிறுதம் எனப்படும் நெய் மற்றும் வர்ம எண்ணை காய்ச்சும் முறைகளை கூறுவோம்,வர்ம தடவும் முறைகளையும் வர்மதானங்களை தட்டும் முறைகளையும் அமர்த்தல் செய்யும் முறைகளையும் கூறுவோம்,வர்மபாதிப்பு ஏற்பட்டால் அதன் குணங்குறிகளான உடலினுள்ளே ஏற்படும மாற்றத்தினையும் உடலுக்கு வெளியே ஏற்படும் மாற்றததினையும் கூறுவோம்,பசுமரத்து ஆணிபோல பக்குவமாக கூறுகிறேன் கேட்பீராக, ஆதி சிவனார் பாதம் காப்பு.

-களரி வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755.

Friday, 8 December 2017